Skip to content
Go back

திருப்புகழ் - நாத விந்து

Published:  at  05:30 AM

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…

  1. நாத விந்துக லாதீ நமோநம
    வேத மந்த்ரசொ ரூபா நமோநம
    ஞான பண்டித ஸாமீ நமோநம … வெகுகோடி
  2. நாம சம்புகு மாரா நமோநம
    போக அந்தரி பாலா நமோநம
    நாக பந்தம யூரா நமோநம … பரசூரர்
  3. சேத தண்டவி நோதா நமோநம
    கீத கிண்கிணி பாதா நமோநம
    தீர சம்ப்ரம வீரா நமோநம … கிரிராஜ
  4. தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம … அருள்தாராய்
  5. ஈத லும்பல கோலா லபூஜையும்
    ஓத லுங்குண ஆசா ரநீதியும்
    ஈர முங்குரு சீர்பா தசேவையு … மறவாத
  6. ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
    சோழ மண்டல மீதே மநோகர
    ராஜ கெம்பிர நாடா ளுநாயக … வயலூரா
  7. ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
    சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
    ஆடல் வெம்பரி மீதே றிமாகயி … லையிலேகி
  8. ஆதி யந்தவு லாவா சுபாடிய
    சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
    ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் … பெருமாளே.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…


Share this post on:

Previous Post
பச்சை மயில் வாகனனே
Next Post
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்